14 May 2009

வேறு ஒரு வலை பூவில் இருந்து எடுக்கப்பட்டது
ஆயிரம் பிரச்சனைகள் இருந்தாலும் நண்பர்களை சந்தித்து பழைய நினைவுகளை கிளறி , மனம் விட்டு சிரித்தால் போதும் பாதி பிரச்சனைகள் ஓய்ந்தார் போல இருக்கும். மனசுக்கு பாரமா இருந்தால் நான் என் நண்பர்களுடன் அலைபேசியில் பேசுவேன். கொஞ்சம் இதமாக இருக்கும். M.Sc., படித்து முடித்து ஆளுக்கு ஒரு திசையில் சிதறி கிடந்தாலும் , மெயில் மூலமாக தொடர்பு கொள்வதும், எல்லோரும் சேர்ந்து ஒரு நாள் தேர்ந்தெடுத்து , பரங்கிபேட்டை பீச் இல் சந்திப்பது வழக்கம். இதற்குள் பல முறை பல மெயில்கள் பறந்திருக்கும்.
இதை மிக எளிமை படுத்தி கொடுக்கிறது ஒரு இணைய தளம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் இது தான்.
1. உங்கள் Plan ஐ ஒரு தலைப்பிட்டு , விளக்கமாக சொல்லுங்கள்
2. உங்கள் நண்பர்களின் Email Address ஐ டைப் செய்யுங்கள், ஏற்கனவே அட்ரஸ் புக்கில் இருந்தால் எடுத்து சேர்த்து கொள்ளுங்கள்.
3. காலண்டர் இல் , உங்களது விருப்பமான தேதிகளை சொல்லுங்கள் . உங்கள் நண்பர்கள் அவர்களுக்கு விருப்பமான தேதியை குறிக்கலாம்.
4. யார் எந்த தேதியில் ஆம் என்று சொல்லியுள்ளார்கள், யார் யார் எந்த தேதியில் இல்லை என்று சொல்லியுள்ளார்கள் என்பது தெளிவாக காலெண்டரில் தெரியும் .
5. எந்த தேதி எல்லோருக்கும் ஒத்துவருகிறதோ , அந்த தேதியை முடிவு பண்ணி எல்லோருக்கும் சொல்லுங்கள்.
6. உங்கள் காலண்டர் உங்கள் கடந்த கால சந்திப்புகளை தேதியிட்டு குறித்துக்கொள்ள உதவும்.
சரி தளத்திற்கு செல்லுங்கள் . உங்கள் நண்பர்களை இந்த வார கடைசியில் எங்கே செல்லலாம் என்று முடிவு பண்ணுங்கள்.
தள முகவரி : http://whichdateworks.com/

No comments:

Post a Comment